33854நம் வீட்டில் அம்மா தினமும் சாப்பிட பேரிச்சம் பழம் கொடுப்பார்கள். சிலர் பேரிச்சம் பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால், அதனை சாப்பிட மறுப்பார்கள். ஆனால் அன்றாடம் பேரிச்சம் பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏன் என்று பலருக்கு தெரியாது. இருப்பினும் அதனை சாப்பிட்டால், உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும் என்று மட்டும் தெரியும். ஆனால் பேரிச்சம் பழத்தில் உடலுக்கு தேவையான எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கலாம். பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! இந்த பேரிச்சம் பழத்தை அப்படியே அல்லது சட்னி செய்தும் சாப்பிடலாம்.இங்கு பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்.

Comments