1

ஜேர்மனியின் பேர்லின் விமானநிலையத்தின் பொறியியலாளர் ஒருவருக்கு அவர் அருந்திய தேநீரில் உடலாபத்தை ஏற்படுத்தக்கூடிய விஷம் கலக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனிய வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பொறியியலாளர், சட்டவிரோத நடவடிக்கைகள் ஏற்படின், அது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கும் பொறுப்பை கொண்டிருந்தவர் ஆவார். விஷம் கலக்கப்பட்ட தேநீரை அருந்தியமையால், அவர் பல மாதங்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருப்பதாக ஜேர்மனிய வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பேர்லினின் Brandenburg விமானநிலையம், 2011 ஆம் ஆண்டு திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் அதில் காணப்பட்ட சில பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளால், அது பிற்போடப்பட்டது.

Comments