f

நடுவானில் பறந்துக்கொண்டு இருந்த விமானத்தில் பயணி ஒருவர் 3 கோடியே 77 லட்சம் இலங்கை ரூபாய் பணத்தை தொலைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி நாட்டை சேர்ந்த 39 வயதான நபர் ஒருவர் துபாயில் கடிகாரங்களை விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், 257,730 டொலர் (3,77,38,041 இலங்கை ரூபாய்) ரொக்கப்பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு நேற்று ஹோங் கோங் நகருக்கு புறப்பட்டுள்ளார்.

துபாயிலிருந்து எமிரேட்ஸ் என்ற விமானத்தில் அவர் பயணம் செய்தபோது, நடுவானிலேயே பணத்தையும் பொருட்களையும் தொலைத்ததாக கூறப்படுகிறது.

எனினும், விமானம் ஹோங் கோங்கில் தரையிறங்கிய பிறகு அவருக்கு இது குறித்து தெரியவர அதிர்ச்சி அடைந்து உடனடியாக பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

பொலிசார் விசாரணையில் இறங்கியபோது, பணத்தை தொலைத்த பயணி விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்துள்ளார்.

ஆனால், பணம் திருடு போய்விட்டதா, விமானத்திலேயே தவற விட்டுள்ளாரா என்ற எந்த தகவலையும் பொலிசார் வெளியிடவில்லை.

இது குறித்து எமிரேட்ஸ் விமான நிறுவன அதிகாரிகள் பேசியபோது, பயணி ஒருவர் பணத்தை தொலைத்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.

தற்போது விசாரணை நடைபெற்று வருவதால் இது குறித்து எந்த தகவலும் வெளியிட முடியாது என கூறியுள்ளனர்.

நடுவானில் விமானம் பறக்கும்போது பயணிகளின் பணம் மற்றும் உடமைகளை திருடுவதற்கு என தனியாக சில குழுவினர் இயங்கி வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments