mahi

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை அழித்துவிட்டோம் என்றும் புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டதென முன்னைய  அரசு உத்தியோகபூர்வமாகஅறிவித்த பின்பு மகிந்த ராஜபக்ஸ சிங்கள மக்களிடம் தான் ஓர் நவீன துட்டகைமுனு என்ற பாணியில் பிரச்சாரங்களை ஏற்படுத்தியதோடு  நாடு முழுதும் பிரபாகரனை அழிந்துவிட்டதாக  பால்சோறு வழங்கி கொண்டாட ஏற்பாடுகளை செய்தது யாவரும் அறிந்ததே.

mahi

இந்த நிலையில் மகிந்த தொடர்ந்து பல்வேறுப்பட்ட பூஜைகளையும், மந்திரங்களையும் அவர் வசித்த இல்லங்கள் தோறும் பாதுகாப்பிற்காக  இரவு பகலெனநடாத்தப்பட்டு வந்ததும் ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வந்ததும் யாவரும் அறிந்தவிடயமே .

இருப்பினும் மகிந்த ராஜபக்ஸ தனது கூடுதலான நேரங்களை ஆலய வழிபாடு மற்றும் மந்திரவாதிகளிடமும் கலந்து ஆலோசனை செய்து தனதுபாதுகாப்பிற்கும் தொடர் ஆட்சிக்கான வழிவகைகளையே ஆராய்ந்து வந்தார் காரணம் பிரபாகரனின் மரணத்தின் மர்மமேயாகும்..

இதில் முக்கியமாக முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களும் இந்தியாவில் இருந்து சிறந்த மந்திரவாதிகளை அழைத்து வந்துரம்பொடை ஆஞ்சநேயர் ஆலயம் மற்றும் கொட்டகலை காங்கிரஸ் நிலையத்திலும் பூஜைகள் நடாத்தப்பட்டது.

mahindha

இருப்பினும் மகிந்த ராஜபக்ஸவினால்  திருப்தியடைய முடியாது பயத்தின் காரணமாக  மாலை வேலைகளில் அதிக மதுபானம் அருந்தி சுய நினைவற்ற நிலையில் இருந்ததாகவும் செய்திகள் கூறின.

இவை அனைத்திற்கும் மேலாக கொழும்பில் பல மில்லியன் ரூபாய் செலவுகளை செய்து பிகோக் மாளிகையில் பல்வேறு மத சடங்குகளை செய்தும் பின், அங்கு பாதுகாப்பு குறை உள்ளதாக எண்ணி அவ்விடத்தில் தனது வாசத்தை நிறுத்தி அவ்விடத்தையும் கைவிட்டார்.

Mahinda Rajapaksa

இருப்பினும் வடகிழக்கு மற்றும் நாட்டின் ஏனைய பகுதி படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆவிகளின் கோபத்தை  அவரின் மந்திர சக்தியால் அடக்க முடியாது  போனது.

இந்நிலையில்,   தற்போதைய அரசு விசேட பயிற்சி பெற்ற இராணுவத்தில் ராஜபக்சவிற்கு விசுவாசமாக இருந்தவர்கள் என்றுகோட்டாவின் சிபார்சில் மகிந்தவின் பாதுகாப்புக்கென இருந்த இராணுவம் வாபஸ் பெறப்பட்ட காரணத்தின் மூலம் மகிந்த இதுவரை தன்னை எதையும் தாங்கம் இதயத்திற்காக நடாத்திய அத்தனை மத சடங்குகள், பூஜைகள் பலனற்று போய்விட்டதால் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்கள்நினைப்பதனைப்போல் இறக்கவில்லை.

அவர் மீண்டும் வந்து தனக்கு கெடுதல்களை செய்து விடலாம் என்ற மனப்பயம் மகிந்தவின் மனதில் மேலோங்கிவிட்டது.

Sarath-Gotta-mahi_CI-400x250

இதன் காரணமாகவே அவர் செல்லும் இடத்திற்கெல்லாம் ஆகக்குறைந்தது 504 பேர் எந்தவழியினாலும் பாதுகாவலுக்கு செல்ல வேண்டும்  என்றும் அதில்குறைந்தது 153 பேர் ஆயுதங்களுடன் செல்ல வேண்டும் என்றும் மந்திரவாதி அறிவித்திருந்திருந்ததாகவும், அவ்வாறே மே முதலாம் திகதிவரை நடைப்பெற்றதாகவும் ஆனால், இதில் மாற்றம் ஏற்பட்டால் அது அவரின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கர்ப்பிணி பெண்களின் மரணத்திற்கு காரணமான எவரும் எந்த பூஜையாலும், எந்த மந்திரத்தாலும் காப்பாற்ற முடியாது என சர்வமதக்கோட்பாடுகள் தெரிவிக்கின்றது. இந்நிலையில் கர்ப்பிணி பெண்கள், அப்பாவி பெண்கள் போன்றவர்களின் மரணத்திற்கு காரணமாக மகிந்த இருப்பதனால் அவரை யாரும் காப்பாற்ற முடியாது என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

mahi-gota-sarath

இந்த நிலையில் இப்பொழுது அவரின் பாதுகாப்பு விடயத்தில் சில மாற்றங்களை தற்போதைய அரசு ஏற்படுத்தியிருப்பதும் மே மாதத்திலேயே நடைப்பெற்று இருப்பதால் வரும் 19ம் திகதி பிரபாகரனை அழித்ததாக அறிவித்த மாதம் என்பதால் இது ஏதோ ஒருவகையில் சம்பந்தப்பட்ட மாதமாக இருப்பதால்,   ராஜபஸ்சவிற்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய மாதமாகலாம் என்ற மன பயம் அவரையும்,   அவரின் குடும்பத்தாரையும் ஆட்டிவைக்கப்போவது சில வேலைகளில் உண்மையாகலாம் என்பது அவரின் மன கணக்காகும்.

எல்லா மதத்தினரும் முழுமையாக நம்புவதும் ஆவிகள் நிச்சயம் உலகில் இருக்கின்றது எனவும்,  அது தீமை செய்தவர்களை நிச்சயம் தண்டிக்கும் என்பதாகும்.  அந்த வழியில் பிரபாகரன் உயிருடன் இருந்தாலும் அல்லது ஆவியான படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஆவிகளிடம் மகிந்தவின் குடும்பம் தண்டணையை பெறப்போவது நிச்சயமாகலாம்.

Comments