ma

 

இலங்கையின் அரசியலும் ஜோதிடமும் ஒன்றோடு ஒன்றிணைந்ததாகவே இதுவரை காலமும் காணப்படுகிறது.

கடந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் ஜோதிடத்தின் மீதான வெறித்தனமாக நம்பிக்கை கொண்டமையால் ஆட்சி அதிகாரத்தையும் இழந்திருந்தார்.

ஆட்சியிலிருந்த எட்டு வருட காலத்தில் மகிந்த தன் கையில் மந்திரக்கோலுடன் திரிந்திருந்தார். அது கேரளாவில் ஒன்பது மந்திரவாதிகளால் செய்து கொடுத்த வசியம் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் இலங்கையின் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளார்.

ஜனாதிபதியான மைத்திரி, அவருக்குரிய உத்தியோகபூர்வ மாளிகையில் வசிக்காமல், பிறிதொரு மாளிகையை வசஸ்தலமாக மாற்றியுள்ளார்.

ஜோதிடர்களின் ஆலோசனைக்கு அமைவாகவே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல்கள் வெளியிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொஸ்கம – சலாவ இராணுவ முகாமில் ஆயுத கிடங்குகள் வெடித்தமையால் பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்தப் பகுதியை சேர்த்த மக்களின் குடியிருப்புகள் நாசமானதுடன், ஆயிரத்து 763 குடும்பங்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி இருந்தனர்.

இந்த அனர்த்தத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீதாவக்க பிரதேச செயலகத்தில் ஒன்றுகூடி பாதிக்கப்பட்ட மக்களின் தேவைக்கான செயற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியிருந்தார்.

பிரதமர் அங்கு சென்ற போதும் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதிக்கப்பட்ட இடத்திற்கு செல்லவில்லை என கொழும்பு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான பரபரப்பான நிலையில் ஜனாதிபதி மாளிகையை மக்கள் பார்வைக்காக தற்போது திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஜனாதிபதியின் தேவைக்கு அமையவே மேற்கொள்ளப்பட்டதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தனிப்பட்ட ஜோதிட நடவடிக்கைளை மேற்கொள்ளும் மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்கவினால் மேற்கொள்ளப்படும் யாகம் ஒன்றிக்காகவே ஜனாதிபதி மாளிகையை, மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டதற்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

மனித சடலங்களை புதைத்துள்ள மயானம் ஒன்றின் மீது ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டுள்ளமையினால், அந்தப் பகுதிக்கு 10 லட்சம் மக்களை அழைத்து வந்து அவர்கள் ஊடாக குறித்த சூனிய கட்டுக்களை அவிழ்ப்பதற்கு நிலூக்கா செயற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொஸ்கம இராணுவ முகாம் பக்கம் செல்ல வேண்டாம் எனவும் நிலூக்காவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சிறிசேன குடும்பத்தில் அதிகாரத்திற்காக மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. இது பிள்ளைகளுக்கு மேல் உறவினர்களுக்குள்ளும் அதிகரித்துள்ளமையினால், ஜனாதிபதியின் ஜாதகத்தை பார்த்த நிலூக்கா சூனியங்களின் காரணமாக ஜனாதிபதிக்கு மரணம் விரைவில் ஏற்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Comments