kriஒன்ராறியோ மாகாணத்தின் துடுப்பாட்ட வீரர்களில் தனது வயதுக்கான முதல்தர இடத்தையும் அதற்கான விருதையும் கடந்த வாரம் தட்டிச் சென்று சாதனை படைத்துள்ளான் காவியன். இவனின் அபாரத் திறமையும், இவன் தந்தை, கவிஞர் மட்டுவில் ஞானகுமாரனின் கடின முயற்சியும், சில நல்லுள்ளங்களின் கைகொடுப்பும் இவனை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் முக்கியமான காரணங்கள்.

“சாரதிச் சகோதரர்களுக்கு ஒரு சல்யூட்” எனும் “படைப்பாளிகள் உலகம்” நிகழ்வில் இவனது பயணத்திற்கான நிதிப் பங்களிப்பை ஏற்று, ஒவ்வொரு மாதமும் மனசார அதைச் செய்யும் என் அன்பு நண்பன் சுதா ( Founder and CEO, Deltaura Transportation ) அவர்களுக்கு என் அன்பான நன்றிகளும் வாழ்த்துக்களும்.

19 வயதிற்குட்பட்ட கனடாவின் தேசிய அணியில் இடம்பெறுவதோடு, உலகக் கிண்ணத்திற்கும் தேர்வாகியுள்ள காவியனை வாழ்த்துவோம்.

Comments