13516252_1776299759308378_2835815592897836207_nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் யேர்மனி
28.06.2016
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் யேர்மனியக் கிளையின் பொதுக்கூட்டம் றைன நகரில் புனித அன்ரனியோ மத்திய நிலையத்தில் 27.06.2016 பி.ப.6.30. மணிக்கு அக வணக்கத்துடன் ஆரம்பமாகியது. தலைவர் தனது அறிக்கையில் 2013ல் தான் பதவியேற்ற காலமுதல் செயற்பாடுகளை எடுத்துரைத்தார். நிருவாகம் கனடா தலைமைப் பீடத்தின் கீழ் இயங்கி வருவதாகவும் செயலாளர் நாயகம் திரு.துரைகணேசலிங்கம் அவர்கள் கொடுத்த பொறுப்புக்களை பிரச்சனை ஏற்படாவண்ணம் எடுத்துச் செல்வதாகவும் குறிப்பிட்டார்.
31.08.15ல் இடம்பெற்ற கூட்ட அறிக்கை திரு.கி.யேம்ஸ் அல்ஸ்ரன் அவர்களால் ஒப்படைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக இயங்குவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு புதிய நிர்வாகம் பொறுப்பேற்றது.
தலைவர் -திரு.இ.இராஜசூரியர்
துணைத்தலைவர் – திரு.இரா.தனபாலசுந்தரம்
சிறப்புத்தலைவர் – திரு.மோகன் குலசேகரம்
செயலாளர் – திரு.கி.யேம்ஸ் அல்ஸ்ரன்
பொருளாளர் – திரு.அ.பகீரதன்
ஆலோசகர் – மாவை திரு.சோ.தங்கராசா
ஆகியோர் தெரிவு பெற்றனர்.
தொடர் செயற்பாடுகள் ஆராயப்பட்டன
இவ் ஆண்டு செப்ரம்பர் மாதத்தில் விழா ஒன்றினை நடத்துவதும் அங்கத்தவர் தொகையை அதிகரித்து யேர்மனி எங்கும் மாநிலங்கள் தழுவிய பொறுப்பாளர்களை நியமிப்பதெனவும் கிளையில் முக்கிய பொறுப்புக்களை எற்க உள்ளவர்கள் ஐந்து ஆண்டுகள் பணியில் இருக்க வேண்டும் எனவும் . புதிய உத்வேகத்துடன் இரண்டு ஆண்டுகளில் செயற்பாட்டில் நிறை வளர்ச்சி காண்பதெனவும் முடிவாகியது. இயக்கம் பதிவு பெற்றிருப்பதால் தொடர்ந்த இயக்க செயற்பாட்டிற்கு அது உதவியானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கத் தலைமையகம் திரு.வி.எஸ்.துரைராஜா அவர்களைத் தலைவராகவும் திரு.துரைகணேசலிங்கம் அவர்களை செயாளர் நாயகமாகவும் கொண்டு சட்டப்படி பதிவு பெற்றிருப்பதால் உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்க யேர்மன் கிளையின் அதிகாரம் இல்லாமல் இயக்கத்தின் சின்னத்தினையோ அல்லது பெயரையோ பாவிக்கும் எவர்மீதும் நீதித்துறையின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
பிரான்சில் 11.09.2016ல் (september) இடம்பெறும் சிறப்பு மாநாட்டிலும் அனைத்துலக சிறப்புக் கூட்டத்திலும் பங்கு பற்றுவதற்கும் 2017ல் இலங்கையில் இடம்பெறும் 13வது உலக மாநாட்டில் பங்குபெறுவதற்கும் மாநாட்டிற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கும் இலங்கையில் அமைக்கப்படவுள்ள உலகத் தமிழர் நடுவண் நிலையம் அமைக்கப்படுவதை ஆதரித்தும் எண்ணங்கள் நிறைவு கொண்டன. பி.ப 9.00 கூட்டம் இனிதே நிறைவுற்றது.
கி.யேம்ஸ்அல்ஸ்ரன்
செயலாளர்13508921_1757816441098517_7861274005661874069_n13509074_1138730326185236_2980142559343066121_n

Comments