aதெற்கு இத்தாலியின் புக்லியா பகுதியில் இரண்டு பயணிகள் ரெயில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. கோராடோ மற்றும் ஆண்டிரியா நகரங்களுக்கு இடையிலான ஒரு வழி ரெயில் பாதையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இரண்டு ரெயில்களும் நான்கு பெட்டிகளை கொண்டது. வேகமாக மோதியதால் இரண்டு ரெயில்களிலும் உள்ள முன் பெட்டிகள் சுக்கு நூறாக சிதைந்தது.

இந்த விபத்தில் சுமார் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணிகளில் மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டனர்.

விபத்திற்கான காரணம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்து துன்பகரமான தருணம் என்று இத்தாலி பிரதமர் மட்டியோ ரென்ஸி கூறியுள்ளார்.

Comments