Sea-srilankaநாட்டை சூழவுள்ள கடற்பிரதேசம் இன்று கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோ மீட்டருக்கும் அதிகமாக வீசக்கூடும். மேலும் புத்தளம் தொடக்கம் கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீட்டருக்கும் அதிகமாக வீசக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனோடு நாட்டில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று மாலை நேரத்தில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments