யாழ். பல்கலைக்கழக கிரிக்கெட் அணி மற்றும் அழைக்கப்பட்ட விளையாட்டுக் கழங்கங்களுக்கு இடையே நடைபெற்ற 50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்திய கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நாளை காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ். பல்கலைக்கழக விளையாட்டு அவையும் கிரிக்கெட் அணியும் இனைந்து நடத்தும் இந்தப் போட்டியின் இறுதிப் போட்டியில் பல்கலைக்கழக கிரிக்கெட் அணியும் யாழ்ப்பானம் ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழக அணியும் மோதிக் கொள்ளவுள்ளன.
இரு அணிகளைப் பொறுத்தவரையிலும் சம நிலையில் காணப்படுகின்றன. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணியைப் பொறுத்தவரையில் துடுபாட்ட வீரர்களை உள்வாங்கிக் கொண்ட அணியாகக் காணப்படுகின்றது. இது பல்கலைக்கழக அணிக்கு ஒரு சாதகமான நிலையை ஏறபடுத்தியுள்ளது.
அதேவேளை ஜொனியன்ஸ் அணியும் அனுபவம் வாய்ந்த சிறந்த துடுப்பாட்டக்காரர்களையும் பந்து வீச்சாளர்களையும் கொண்ட பலமான அணி என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, நாளை நடைபெறும் போட்டியானது இறு அணிகளுக்கும் பலப்பரீட்சையாக அமைவதுடன் பார்வையாளர்களுக்கு மிகவும் உற்சாகமான போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments