பெரும் இசைக் கலைக்குடும்ப வாரீசாவார்.திரு வசந்தகுலசிங்கம் ஆசிரியர் புல்லாங்குழல் வித்தகர்.இவருடைய மனைவி மக்கள் எல்லோருமே இசைக் கலைஞர்களாவர். உமா இவர் ஆனைக்கோட்டை உயரப்புலத்தை பிறப்பிடமாக்கியவர்.ஊரில் சிறு வயதிலேயே இவர்களை நான் நன்கறிந்தவன்.சிறந்த உதைபந்தாட்ட வீரருமாவார். சென் பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவராவார்..புலம் பெயர்ந்து டென்மார்க்கில் ஆரம்பத்தில் குடியேறிய கலைஞர் உமா அங்கு வாழும் காலத்தில் இசைக் குழுவொன்றினை உருவாக்கி பல கலைஞர்களை புடம் போட்டவர்.
பின்னர் லண்டன் வந்து சேர்ந்தார். அங்கும் தனது இசைப் பயணத்தை விட்டு விடவில்லை.சீராக இயங்கிய காலத்திலேயே இவரது மனைவியாரின் காலத்தை காலன் கணக்கு தீர்த்துக் கொண்டான்..அந்த மீளாத் துயரில் இருந்து மீள்வதற்கு இவரது இசைப் பயணம் ஓரளவு ஆறுதலைக் கொடுத்தது எனலாம்.தனது மகளையும் ஓர் சிறந்த பாடகியாக வளர்த்துக் கொண்டவர்.
லண்டன் வாழ் பல இளம் சிறார்களுக்கு சுரத்தட்டு ஆசிரியராக இன்று வரை செயல் பட்டு வருகின்றார்..துரித கதியில் மெட்டிசைத்து பாடல்களை வடிவமைக்கும் வல்லவராவார்.ஐந்து வருடங்களுக்கு முன்னால் இளவாலை புனித ஹென்றி அரசர் பாடசாலையின் உதை பந்தாட்ட வீரர் றாஜ் அப்பையா எனும் வீரர் காலமான போது இறுதியாத்திரையில் கலந்து கொள்ளச் சென்றிருந்த போது என்னைச் சந்தித்தவர் தனது இல்லத்துக்கு அழைத்துச் சென்று இரு பாடலுக்கு வரிகள் எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டார் காலம் சென்ற நண்பர் றாஜ் நினைவாக.அக்கணமே நானும் எழுதிக் கொள்ள நையாண்டி மேள இயக்குனர் கணேஸ் தம்பையாவின் குரலில் பாடவைத்து மறு நாள் நண்பனின் இறுதி யாத்திரையில் இறுவட்டாக்கி வழங்கிக் கொண்டிருந்தார். அப்பாடல்களை கேட்ட அனைவருமே இவரது இசையால் கட்டுண்டு கதறிக் கண்ணீர் விட்டழுததைக் கண்ணால் கண்டவன் நான். நாடக ஆசான் தாசியஸ் அவர்களும் அன்று கலந்து கொண்டிருந்தார் அவரும் இவரது ஆற்றலைப் பாராட்டிச் சென்றதை அவதானித்துள்ளேன்.இழப்புக்களால்
வலிகளும் வேதனைகளும் இவரைக் கவ்விக் கொள்ள தற் சமயம் மாணவர்களோடு மட்டும் வகுப்பு நடத்தி வருகின்றார்.இவர் போன்ற ஆற்றல் மிக்கவர்களுக்கு பணி மிகவும் காத்திரமானதும் நீளமானதும்.மேலும் பல கலைஞர்களை உருவாக்க வேண்டும் இவரும் அரங்கங்கள் காண வேண்டும் என வேண்டி உரமிடுவோம்.வாருங்கள் உறவுகளே உமா வசந்த குலசிங்கம் அவர்களை வாழ்த்தி வரவேற்போம். வாழிய வாழியவே..

Comments