இந்த மேதினத்தில் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்து சுகமாக வாழ சிந்திப்போம். சுதந்திரக் காற்றே எனைத் தீண்டு!. கவிவரிகள்: ஆனைக்கோட்டை ஈழநேசன்

சுதந்திரக்காற்றே எனைத்தீண்டு!

சோகத்தை எல்லாம் தான் மாற்றி
சொந்தங்களை மீண்டும் ஒன்றிணைக்க
வேதனைகள் யாவையும் வெட்டியெறிந்து
மீண்டும் ஓர் வெற்றி நடைபோட
சுதந்திரக்காற்றே எனைத் தீண்டு!

மண்ணை நான் காக்கணும் – தமிழ்
மக்களை நான் மீட்கணும்
மகிழ்ச்சியில் நாம் வாழ்ந்திட
உயர்வை நாம் அடைந்திட
சுதந்திரக்காற்றே எனைத் தீண்டு!

வெட்டிய வாழை முளைத்துவிட
வே‌தனை யாவும் பறந்துவிட
பாதகம் தன்னே அழிந்து விட
பாவிகள் கொடுமையும் ஒழிந்துவிட
சுதந்திரக்காற்றே எனைத் தீண்டு!

தினம் தினம் அழுகின்ற தமிழினத்தின்
கண்ணீரை கரை சேர்க்க
கவலைகளை கப்பலேற்ற
ஒளி பெற்ற நிலம் போல் மனம் மாற
சுதந்திரக்காற்றே எனைத் தீண்டு!

கோழையாய் இருக்கின்ற
எம் நெஞ்சம் குளிரின்றி சூடேற
சுதந்திரக்காற்றே எனைத் தீண்டு!

இறந்தேஇருக்கின்ற எம்முணர்வு
ஈட்டி போல் மாறிட
உன் உயிர்ப்பு
என்னிடம்தான் மெல்ல ஏற்றிடமாட்டாயா!
ஓருயிராய் உடலிற்கு ஓடியே
வந்தென்னுடன் ஐக்கியமாக மாட்டாயா!

சுந்திரக்காற்றே சொல்! சொல்!
சோகங்களை எல்லாம் வெல்! வெல்!
என் சொந்தமாகி நில்! நில்!

கவிவரிகள்: ஆனைக்கோட்டை தமிழ்நேசன் .

Comments