அநுராதபுரம் விலச்சிய பகுதியில் இன்று காலை பிரதேசவாசிகளுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் புதையல் தோண்டியதாகவும் இதை பிரதேச மக்கள் தடுக்கச் சென்றமையினாலும் இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தொல்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியை சோதனையிடவே படையினர் அங்குச் சென்றுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்ரோகண தெரிவித்தார்.
எனவே புதையல் தோண்டிய சம்பவத்துக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் பக்கோ இயந்திரத்தை வைத்து அதிரடிப்படையினர் அகழ்வுகளில் ஈடுபட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Comments