கூட்டத்தார் கோவிலும் யாழ்ப்பாண இராசதானியும்
இலங்கையில் உள்ள மதங்களுள் இந்து மதத்திற்கு 3000 ஆண்டுகளுக்கு குறையாத தொன்மையான, தொடர்ச்சியான வரலாறு உண்டு. பௌத்த மதம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்த முன்னரே இந்து மதம் வழிபாட்டுக்குரிய மதமாக இருந்ததற்கு உறுதியான தொல்லியல், இலக்கிய ஆதாரங்கள் காணப்படுகின்றன. கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் பண்டுகாபயன் அநுராதபுரத்தில் ஆட்சி செய்தபோது, ...