துன்னாலை வடக்குப் பகுதியில் இளம் தம்பதியினர் குளித்துக்கொண்டிருப்பதை எட்டிப்பார்த்த இருவரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட நீதிமன்ற நீதவான் பெ.சிவகுமார், திங்கட்கிழமை (28) உத்தரவிட்டார். இதேவேளை, சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குமாறு அவர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி விடுத்த கோரிக்கையையும் நீதவான் நிராகரித்தார். இரவு வேளையில் வீட்டு குளியலறையில் இளம்தம்பதியினர் குளித்துக்கொண்டிருந்த ...