யாழ். கொழும்புத்துறை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வீட்டு வேலைக்காக வந்த மன்னாரைச் சேந்த இரு
பெண்கள் வீட்டிலுள்ள தங்க நகைகளை களவாடிய குற்றத்திற்காக காவற்துறையினரால் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
 இதன்படி,காவற்துறையினரால் மேற்கொண்ட விசாரணையில் தெரியவருவதாவது,
மன்னாரிலிருந்து, யாழிற்கு வீட்டு வேலைக்காக வந்த பெண்களே இவ்வாறு தங்க நகைகளை களவாடி,
மலசலக்குழியில் மறைத்து வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
 இவ், இரு பெண்களும் 3,62,500 ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களைத் திருடிக் கொண்டு மலக்குழியில்
ஒழித்து மறைத்து வைத்துள்ளனர்.
 இதேவேளை, நேற்றைய தினம் மலக்குழியிலிருந்து மீட்கப்பட்ட தங்க ஆபரணங்களுடன் யாழ்.நீதிவான்
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த இரு பெண்களும் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பிரகாரம் ஜந்து
வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட சிறைத்தண்டனையை யாழ்.நீதிமன்ற நீதிவான்
மா.கணேசராசாவழங்கியுள்ளார்

Comments