தென்மராட்சி நாவற்குழியில் எட்டுவயதுப் பாலகி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செöதார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செöயப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்றுமுன் தினம் இடம்பெற்றது.

குறித்த சிறுமியின் உறவினர் எனத் தெரிவிக்கப்படும் 19 வயது இளைஞர் ஒருவர் சிறுமியை கடந்த 2 வருடகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார்.
 எனினும் இந்த விடயம் எவருக்கும் தெரியாமலே இருந்தது. எனினும் நேற்றுமுன்தினம் சிறுமி பாடசாலையில் திடீரென மயக்கமடைந்து விழுந்தாள். இது தொடர்பாக ஆசிரியர்கள் சிறுமியிடம் விசாரித்த போதே குறித்த இளைஞரால் தான் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி வரும் விடயத்தை சிறுமி போட்டுடைத்தாள். இது தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
 இதன் பின்னர் துரித நடவடிக்கையில் இறங்கிய பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நாவற்குழியைச் சேர்ந்த சந்தேக நபரைக் கைது செய்தனர். இவர் நேற்றைய தினம் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார். இவரை விசாரணைக்கு உட்படுத்திய நீதிவான் குறித்த சந்தேகநபரை 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Comments