மெக்ஸிக்கோவைச் சேர்ந்த 10 வயது சிறுமி டெவ்னி அல்மெசன் உளவியல் விஞ்ஞானப் பட்டதாரியாகப் பட்டம் பெற்றுள்ளார். தனது நான்காவது வயதில் இடைநிலைப்படிப்பை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்த இவர், பட்டப்படிப்பை மெக்ஸிக்கோ மொன்ட்ரோ பல்கலைக்கழகத்தில் பயின்றார்.இந்தச் சிறுமியின் மூத்த சகோதரி டெலனி 14ஆவது வயதிலே இதே பல்கலைக்கழகத்தில் உளவியல் விஞ்ஞானத்துறையில் பட்டம் பெற்றார். இந்தச் சிறுமிகளின் அண்ணனான அன்ட்ரூ 18 வயதுடையவர். அவர் மனோதத்துவ மருத்துவராகக் கடமையாற்றுகிறார். அன்ட்ரூவும் தனது 16 ஆவது வயதில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments