மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் நகரில் நடைபெற்ற ”ஆசிய சர்வதேச திருமதி அழகி 2012” போட்டியில் முதல் இடத்தினை இலங்கைப் பெண் பெற்றுள்ளார்.

32 வயதான ஶ்ரீமாலி பொன்சேக்கா என்பவரே இவ்வாறு முடி சூடியுள்ளார்.
இந்தப் போட்டியில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தனர்.

1985ஆம் ஆண்டு ரோசி சேனாநாயக்க ”திருமதி” பட்டத்தை வென்ற பின்னர் திருமதி பட்டம் ஒன்று 27 வருடங்களின் பின்னர் இலங்கையர் ஒருவருக்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments