சாதனைகளை நிகழ்த்த துணிவே துணை என்பதை கனடாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் நிரூபித்து இருக்கிறார்.

டொராண்டோ நகரை சேர்ந்தவர் ஸ்பென்சர் வெஸ்ட் (வயது 31). இவர் 5 வயது சிறுவனாக இருந்த போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு இரு கால்களையும் இழந்து விட்டார்.

என்றாலும் அவர் உள்ளத்தில் மன தளர்ச்சி இல்லை. அவர் ஆப்பிரிக்காவில் இருக்கும் உயர்ந்த மலைச்சிகரமான கிளிமான்ஜரோ என்ற சிகரத்தில் ஏறி சாதனை படைக்க தீர்மானித்தார்.

இதனை அடுத்து 7 நாட்களில் 19,341 அடி உயரமுள்ள அந்த மலைச்சிகரத்தை தனது நண்பர்கள் மூலமும், வீல்சேர் மூலமும், கைகளை ஊன்றியும் கடந்து சாதனைப் படைத்துள்ளார்.

 

Comments