மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியில் வைத்து பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற இராணுவச் சிப்பாயையும் அவரது சகா ஒருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்களை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் உத்தரவிடடுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
கடந்த செவ்வாய்க்கிழமை காலை நகைக் கடைக்குச் சென்று வீடு திரும்பிய பெண் ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுண் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துச் சென்றுள்ளனர்.

இதன்போது கொள்ளையில் ஈடுபட்ட ஒருவரது கையடக்கத் தொலைபேசி தவறுதலாக கிழே வீழ்ந்துள்ளது. அந்த கைத்தொலைபேசியை மட்டக்களப்பு காவல் நிலையத்தில் குறித்த பெண் ஒப்படைத்துள்ளா

Comments