வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் கொடியேறி திருவிழாக்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை நிலையில். ஆலய சூழலைச் சுற்றி மாநகர சபையின் கடை குத்தகைக் கட்டணம் கொடிகட்டி பறந்து வருகின்றது.
ஆண்டுதோறும் திருவிழாவில் ஆலயச் சூழலில் வியாபாரம் செய்வதற்கு கட்டணமாக குறித்த தொகையை மாநகரசபை வசூலிப்பது வழமை. எனினும் அளவுக்கு அதிகமாக கட்டணங்களை வசூலிப்பதாக வர்த்தகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதாவது இப்பகுதியில் கடை ஒன்றை போடுவதற்கு இருபத்தையாயிரம்ரூபா முதல் 2இரண்டு லட்சத்து ஜம்பதாயிரம் ரூபா வரை யாழ்.மாநகர சபையினர் வசூலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு சிறிய கடையான அதாவது 8 அடி சுற்றளவினைக் கொண்ட கச்சான் கடை ஒன்றுக்கு இருபத்தையாயிரம் ரூபா கேட்பதாக வர்த்தகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
போரினால் தமது வாழ்வாதாரத்தினை இழந்து கடைசியில் திருவிழாக்களில் சிறு கடைகளை போட்டாவது எங்களது நாளாந்த வாழ்க்கையினை கொண்டு நடத்தலாம் என்று நினைத்து வந்த சில்லறை வியாபாரிகளின் நிலை இவ் மாநகர சபையின் கடைக் குத்தகை கட்டணத்தால் தொலைந்து போயுள்ளதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

 

 

Comments