லண்டன், ஜூலை 30: லண்டனில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியின் இரண்டாம் நாளான நேற்று மொத்தம் 14 தங்கப் பதக்கங்கள் கைபற்றப்பட்டன.

இதில் மகளில் குழு வில் வித்தைப் போட்டியில் தென் கொரிய மகளிரணியை எதிர்த்து சீனா மோதியது. தங்கப்பதக்கத்திற்கான இறுதி போட்டியில் முதலில் ஆடிய தென் கொரிய மகளிரணி 210-209 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 7வது முறையாக தென் கொரிய அணி மகளிர் வில்வித்தை குழுப் போட்டிக்கான தங்கப் பதக்கத்தை வென்றது.

மகளிருக்கான தனிநபர் 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில், அமெரிக்கா டானா வால்மெர் புதிய உலக சாதனை படைத்து தங்கப்பதக்கத்தை வென்றார். சீன வீராங்கனை லூ யிங் வெள்ளிப் பதக்கத்தையும், ஆஸ்திரேலியாவின் அலிசியா வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

மகளிருக்கான துப்பாக்கி சுடுதலில் அமெரிக்கா வீராங்கனை கிம் ரோடே தங்கப் பதக்கம் வென்றார். வெள்ளிப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை வீ நிங், 91 இலக்குகளை மட்டுமே சுட்டார். இப்போட்டியில் ஸ்லோவேகியாவின் பார்டேகோவா வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதேபோல் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில், சீன வீராங்கனை வென் ஜுன் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர் 488 புள்ளி ஒரு புள்ளிகள் பெற்று, 2008 ஒலிம்பிக் சாம்பியன் பட்டத்தையும் தக்க வைத்துக் கொண்டார். பிரான்ஸ் வீராங்கனை செலீனும், உக்ரைன் வீராங்கனை ஓலீனாவும் 486 புள்ளி ஆறு புள்ளிகள் பெற்றதால் ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் செலீன் வெள்ளிப் பதக்கமும், ஒலீனா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

Comments