உலகின் மிக குள்ளமான மனிதராக சந்திர பகதூர் டாங்கி என்ற நேபாளி தேர்வு பெற்றார். நேபாளத்தை சேர்ந்த 72வயது மனிதர் சந்திர பகதூர் டாங்கி. இவரது உயரம் வெறும் 54.6 செ.மீ. எடை 12 கிலோ. இவர்தான் உலகின் மிக குள்ளமான மனிதர் என்று நேபாள மக்கள் கருதினர். இதையடுத்து, கின்னஸ் புத்தகத்துக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து, கின்னஸ் புத்தகத்தின் தலைமை ஆசிரியர் கிரெய்க் கிளண்டே தலைமையில் ஒரு குழு, காத்மாண்டுக்கு வந்தது. குழுவினர் சந்திர பகதூரின் உயரத்தை அளந்து பார்த்தனர்.   இதற்கு முன்பு இந்தியாவை சேர்ந்த குல்முகமது என்பவர்தான் உலகின் மிக குள்ளமான மனிதர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருந்தார். அவரது உயரம் 57 செ.மீ. இப்போது சந்திர பகதூரின் உயரம் 54.6 செ.மீ. என்று கண்டுபிடிக்கப்பட்டதால், கின்னஸ் சாதனை விருது பகதூருக்கு கிடைத்தது. விருதை கின்னஸ் புத்தக தலைமை ஆசிரியர் கிரெய்க் நேற்று பகதூரிடம் வழங்கி பாராட்டினார்.

Comments