யாழ்.போதனா வைத்தியசாலையில் இயங்கிவரும் தேநீர்ச் சாலையில் (கன்ரீன்) சுகாதாரச் சீர்கேடு நிலவுகின்றமை தொடர்பான முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுவதால் அது தொடர்பில் ஆராய்ந்து இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப் பிக்குமாறு யாழ்.நீதிமன்றம் பொதுச் சுகாதரப் பரிசோதகர்க ளுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதிகாரிகளைத் திருப் திப்படுத்துவதற்காக வேலைகளைச் செய்யாது மக்களுக்கு உள்ள சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வேலை செய்ய வேண்டும் என்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

குருநகர், சின்னக்கடையில் பாவனைக்கு உதவாத வகையில் இறைச்சியை வைத் திருந்தவருக்கு எதிராகப் பொதுச் சுகாதாரப் பரிசோத கர்களால் தாக்கல் செய்யப் பட்ட வழக்கின் தீர்ப்பின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

யாழ்.போதனா வைத்தி யசாலையில் இயங்கிவரும் தேநீர்ச் சாலையில் சுகாதாரச் சீர்கேடு நிலவுவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கின்றன. அது தொடர்பில் ஆராய்ந்து இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தமக்கு மேலுள்ள அதிகாரிகளைத் திருப்திப்படுத்துவதற்காக வேலை செய்யாமல், மக்களின் சுகாதாரப் பிரச்சினைகளை அறிந்து அவற்றுக்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுகாதாரச் சீர்கேட்டுடன் தொடர்புடையவர்கள் உங்களுக்குத் தெரிந்தவர்கள் அல்லது உங்களுக்கு வேண்டியவர்களாக இருந்தால் ஏனைய பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதை விடுத்து நடவடிக்கை எடுக் காமல் இருக்க முடியாது.

உணவு கையாளும் நிலையங்கள் ஏ.பி.சி.டி. என வகைப்படுத்தப்பட்டு இயங்கி வருகின்றது. எனினும் அவற்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பரிசோதனை நடவடிக்கையைத் தீவிரப்படுத்தல் வேண்டும் என்று நீதிவான் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலை தேநீர்ச் சாலை நிலைமை தொடர்பில் மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகவும் நேற்றுமுன்தினம் வைத்திய சாலைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுடன் இணைந்து நிலையத்தைப் பலர் பார்வையிட்டதாகவும் யாழ்.மாநகர சபை பிரதம பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜீவநாதன் தெரிவித்தார்.

Comments