சீனச் சிறுவன் ஒருவன் 7 வயதில் அசாத்தியமான பலத்தைப் பெற்று பார்ப்பவர் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறான். சுஸொயு நகரைச் சேர்ந்த யாங் ஜின்லோங் ௭ன்ற மேற்படி சிறுவன் காரொன்றை இழுக்கவும், தனது தந்தையைத் தூக்கவும் ௭துவித களைப்பும் இன்றி பாரமான தானிய மூடைகளைச் சுமந்து செல்லவும் பலத்தைக் கொண்டுள்ளான்.

ஏற்கெனவே 50 கிலோகிராம் நிறையைக் கொண்டுள்ள யாங் ஜின்லோங், தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறான். அவன் 1.85 தொன் நிறையுடைய வேனொன்றைக் கயிற்றில் கட்டி வீதியெங்கும் இழுத்துச் சென்றுள்ளான். மேலும், தன்னை விட சுமார் இரு மடங்கு நிறையுடைய (90 கிலோ கிராம்) தனது தந்தையை மிகவும் சுலபமாக யாங் ஜின்லோங்கால் தூக்க முடிகிறது. அது மட்டுமல்லாமல், 40 கிலோ கிராம் நிறையுடைய கோதுமை தானியப் பொதியையும் 100 கிலோ கிராம் நிறையுடைய சீமெந்துப் பொதியையும் தூக்கும் வல்லமையை அவன் பெற்றுள்ளான்.

7 வயதுடைய சராசரி சிறுவர்களின் நிறை 20 கிலோகிராமுக்கும் 35 கிலோ கிராமுக்கும் இடைப்பட்டதாகும்.

Comments