யாழ்ப்பாணத்தில் இன்று காலை மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மல்லாவியைச் சேர்ந்த கந்தசாமி திருக்குமரன் (வயது 29) என்ற இளைஞனே உயிரிழந்தவராவர்.

இவர், யாழ்ப்பாணம் சங்கரத்தை துணைவிச் சந்தியிலுள்ள வாகனம் திருத்தும் நிலையத்தில், வாகனம் திருத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கையில் மின் ஒழுக்கு காரணமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரேதப் பரிசோதனைக்காக குறித்த இளைஞனின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இளவாலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Comments