அடுப்பெரிக்கச் சென்ற கர்ப்பிணித்தாய் தீப்பிடித்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று மன்னார் வெள்ளாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்று மன்னார் – வெள்ளாங்குளம் சேவா கிராமத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தினால் அதே கிராமத்தில் வசித்து வந்த கர்ப்பிணித் தாயான 18 வயதுடைய நிசாந்தன் மயூரி ௭ன்பவரே பலியாகியுள்ளார். குறித்த பெண் ௭ரிகாயங்களுக்கு இலக்கான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.

அடுப்பைப் பற்ற வைக்கும் போது தவறுதலாக ஆடையில் தீ பிடித்ததனால் குறித்த கர்ப்பிணித் தாய் உயிரிழந்துள்ளார். இவரது சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments