கலைத்தேவி

அம்மா தாயே கலைத்தேவி
அருள்வாய் எமக்கு வரம் நீயே

எங்கள் நகரில் நீயிருந்து
மேன்மிகு தமிழை தந்திடுவாய்
சிறுவர்கள் நாங்கள் சிறப்படைய
தருவாய் தாயே வரம் எமக்கு

தாயே உந்தன் தயவுடனே
தரமிகு கல்வியை நாம் பெறவே
தருவாய் அருள்வாய் சரஸ்வதியே
தந்தெமை வளர்ப்பாய் சரஸ்வதியே

இயலிசை நாடகம் என்பவற்றை
இன்றே பயின்று வெற்றி பெற
தருவாய் உன் அருள் கலைத்தேவி
தந்தருள் காப்பாய் கலைத்தாயே

அம்மா தாயே கலைத்தேவி
அருள்வாய் எமக்கு வரம் நீயே

கவியாக்கம்: ஆனைக்கோட்டை தமிழ்நேசன்

Comments