திருமணத்திற்காக வருகை தந்த மணமகள் காதலுடனுடன் ஓடி  சம்பவம் ஒன்று செல்வச்சந்நிதி ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலையத்திற் நேற்று மட்டும் சுமார் 36 திருமண சடங்கு இடம்பெற்றுள்ளது.

இதில் 20 ஆவது திருமணத்திற்கு என குறித்த மணமகனும், மணமகளும் வந்துள்ளனர்.

திருமணம் நடைபெறவிருந்த ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் குறித்த மணமகள் தனது நீண்ட நாள் காதலனை அழைத்து அவருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த இச் சம்பவம் தமிழ் சினிமாவில் வருவது போன்று மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினரால் இந்த இடத்தை ஒரு கலக்கு கலக்கி மணமகளை கூட்டிச் சென்றுள்ளனர்.

அவர்களை, அங்கிருந்த சிலர் பின்தொடர்ந்தும் போதும் அவர்கள் அங்கிருந்து ஓடி மறைந்து விட்னர் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மணமகள் வருவாள் என்ற நம்பிக்கையில் சில மணிநேரம் காத்திருந்த மணமகன் தனது மச்சாளை மணம் முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

Comments