கோழிகள் முட்டையிட்டு அதை 21 நாட்கள் அடைகாத்த பின்னர் குஞ்சு பொரிப்பது வழக்கம். ஆனால்  கோழி ஒன்று முட்டைக்குப் பதிலாக கோழிக் குஞ்சை ஈன்றெடுத்த அதிசய சம்பவம் கேரள மாநிலத்தில் நடந்துள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு புலியன்னூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் டி.பி.பரதன். இவர் தனது வீட்டில் ஒரு கோழியை வளர்த்து வந்தார். இந்தக் கோழி மற்றைய கோழிகளைப் போல முட்டை போட்டாலும் அதை அடை காப்பதில்லை.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அந்தக் கோழி வழக்கத்துக்கு மாறாக தொப்புள் கொடியுடன் கூடிய ஒரு குஞ்சை ஈன்றது. குஞ்சை ஈன்ற வேகத்தில் அந்தக் கோழி உடனடியாக வழக்கம் போல இரை தேடச் சென்று விட்டது.

இதைப் பார்த்த கோழியின் உரிமையாளர் ஆச்சரியம் அடைந்ததோடு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அந்தp பகுதியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அதிசயக் கோழியையும், அது ஈன்றெடுத்த குஞ்சையும் பார்த்துச் சென்றனர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதியது.

Comments