கனடா நாட்டிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 7.7. ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஹவாய் தீவை சுனாமி தாக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் பெரிய சுனாமி தாக்குதலோ, சேதமோ எதுவும் ஏற்படவில்லை.

இந்நிலையில் அதே பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.3 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் துறை தெரிவித்தது. அங்குள்ள பிரின்ஸ் ரூபெர்ட் என்ற இடத்தில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டது. ஆனால் சேதம் குறித்து தகவல் இல்லை.

Comments