வீடுகள் வானில் பறக்கும் அதிசயமிக்க காட்சிகளை படங்களிலே பார்ப்பதுண்டு. ஆனால் பிரான்சைச் சேர்ந்த ஒவியர் ஒருவர் ‘பறக்கும் வீடுகள்’ என்ற தலைப்பில் வீடுகள்பறக்கும் வகையிலான ஓவியங்களை வரைந்து பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளார்.

மேற்படி தலைப்பில் வரையப்பட்டுள்ள ஓவியங்களில் வீடுகள் மின்சாரக்கம்பிகளின் தொடுப்பில்; இணைக்கப்பட்ட நிலையில் தொங்கும் வகையிலும் அந்தரத்தில் வீடுகள் பற்றியெறியும் வகையிலும் மற்றும் அந்தரத்தில் தொங்கும் கடைத்தொகுதிகள் என்பனவும் காணப்படுகின்றன.

பிரான்சைச் சேர்ந்த லோரன் செஹேரா என்ற ஓவியரே இத்தகைய காட்சகிளை வரைந்துள்ளார். இவரது ஓவியங்களானது டிஸ்னி திரைப்படத்தில் தோன்றும் காட்சிகளை ஒத்தவகையில் காணப்படுகின்றன.

இந்த கனவு ஓவியங்களானது புதிய கோணங்களில் வரையப்பட்டுள்ளதுடன் பார்வையாளர்களின் சிந்தனையை தட்டியெழுப்பும் வகையில் வரையப்பட்டுள்ளன.

மேற்படி ‘பறக்கும் வீடுகள்’ ஓவியங்களானது கடந்த 25 ஆம் திகதியிலிருந்து பாரிஸில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

Comments