யாழ்.குடாநாட்டில் வெங்காயத்தின் விலை நாளாந்தம் உயர்ந்து வருகின்றது. சராசரியாக ஒரு அந்தர் 3 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த வெங்காயம் தற்போது 6 ஆயிரத்து 500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வன்னி, திருகோணமலை மாவட்டங்கள் மாத்திரமன்றி யாழ். மாவட்டத்திலும் கடும் வறட்சியால் சிறுபோக வெங்காயச் செய்கையின் விளைச்சல் வெகுவாகக் குறைவடைந்திருந்தது. அத்துடன் பெரும்போக வெங்காயச் செய்கை விரைவில் ஆரம்பமாக இருப்பதால் விதை வெங்காயத்துக்கு பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இவற்றின் காரணமாகவே வெங்காயத்தின் விலை உயர்வடைந்துள்ளது என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பெரும்போக வெங்காயச் செய்கை ஆரம்பமாகும் வேளை வெங்காயத்தின் விலை மேலும் சில ஆயிரம் ரூபா வரை உயர்வடையலாம் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

Comments