செந்நிற உடை

கருத்துடை வேந்தரே!
காவியத்தின் மைந்தரே!

வெறுத்துடை அணிந்தீரே
வீரத்தின் விழிச்சுடரே!

பருத்துடை அணியாது
பாதியிலே ‌ செந்நிறத்துமை காண
சென்றுடையாய் போனீரே!

எந் உடையில் நாமிருந்தும்
என்ன பயன்!

எம்மால் முடியவில்லை
உம்முடை தாங்க!

என்னவென அழைப்பேன்
என்னவனே! மன்னவனே!
மக்களின் மணிவிளக்கே!

பொன்னுடை அணியும் வயதிலா
செந்நுடை அணிய வேண்டும்!

பைந்தமிழின் நிலை மாற்ற
பாவிகளின் கொடி போக்க அணிந்தீரே!

கவியாக்கம்: ஆனைக்கோட்டை தமிழ்நேசன்

Comments