புதையல் மூலம் பெற்றதாகக் கூறி ஆயிரக்கணக்கான பொற் காசுகள் மற்றும் நாணயக் குற்றிகளை விற்பனைக்கு எடுத்து வந்த 4 பேர் கண்டி பொலிஸாரால் கண்டி கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் வாகனம் ஒன்றில் கண்டி நகருக்கு கொண்டு வரப்பட்ட மேற் குறிப்பிட்ட போலி உலோக குற்றிகளை கண்டி நகரில் வியாபாரி ஒருவருக்கு விற்பனை செய்ய முயற்சித்த போது மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றின் படி இப் போலி உலோக குற்றிகளுடன் நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்த நாணயக் குற்றிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் அவர்களிடம் இருந்து எட்டு கையடக்க தொலைபேசிகளும் நவீன ரக மோட்டார் வண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேற்படி தொலைபேசிகளை உபயோகித்தே தமது வர்த்த நடவடிக்கைகளை மேற் கொண்டதாகவும் பொலீஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களுல் ஒருவர் ஜாஎல பிரதேசத்தை சேர்ந்த பிரதேச அரசியல்வாதி ஒருவரது சகோதரர் என அவர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்களை கண்டி பிரதான நீதவான் முன் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Comments