யாழ்ப்பாணத்தில் உள்ள மருதனார்மடம் எனும் இடத்தில் ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சோ்ந்த ஸ்தபதி ஒருவரினால் வடிவமைக்கப்பட்ட 72 அடி உயரமுடைய ஆஞ்சநேயர் சிலை கம்பீரமாக காட்சியளிக்கின்றது.

இலங்கையில் யாழ்ப்பாணம் அருகே கட்டப்பட்டுள்ள குறித்த ஆஞ்சநேயர் சுவாமி ஆலய குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள மருதனார்மடம் எனும் இடத்தில் ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்தபதி சிற்ப கலாசுரபி விஸ்வ பிரம்மஸ்ரீ கலியப்பெருமாள் புருஷோத்தமனால் 72 அடி சிலை வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைதான் இலங்கையிலேயே மிக உயரமான கம்பீரமான ஆஞ்சநேயர் சிலையாகும்.

இந்த ஆலயத்தின் குடமுழுக்கு விழா கடந்த புதன்கிழமை (23.01.2013) நடைபெற்றது.

சிவஸ்ரீ இ.சுந்தரேஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதால் யாழ்ப்பாணத்தின் பிரதான சாலைகளில் ஒன்றான யாழ்.-காங்கேசன்துறை சாலையின் போக்குவரத்து சில மணிநேரம் தடைப்பட்டது.

குடமுழுக்கு நிகழ்வினைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. வரும் 11.03.2013 அன்று மண்டலாபிஷேகம் நிறைவடையும். யாழ்ப்பாணம் நகரில் இருந்து மருதனார்மடம் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments