க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று 30ஆம் திகதி வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார் .

அன்றைய தினம் பரீட்சைகள் திணைக்களத்தின் http://www.doenets.lk/exam/ என்ற இணையத்தளத்தினூடாக பரீட்சார்த்திகள் தமது பெறுபேறுகளை அறிந்துகொள்ள முடியும்.

அதேவேளை, நாளை  அனைத்து பாடசாலைகளுக்கும் பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுமெனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

348 ஆயிரத்து பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments