யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனொருவன் ஜப்பானில் நடைபெறவுள்ள 25வது ஆசிய பசுபிக் சிறுவர் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பாலேந்திரன் அபிராம் என்ற மாணவனே இந்த மாநாட்டுக்கு செல்வதற்காக கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் 25ம் திகதி ஜப்பானில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், இலங்கையில் இருந்து 6 மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாலேந்திரன் அபிராம் மாணவன் கடந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 193 புள்ளிகளைப் பெற்று முதன்மை மாணவனாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments