உலகின் மிக உயரமான ஹோட்டல் டுபாயில் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ஜே.டபிள்யூ மெரிஹொட் மார்குயிஸ் டுபாய் என்ற பெயர் கொண்ட இவ் ஹோட்டலில் உயரம் 1,164 அடிகளாகும் ஆகும். இவ் ஹோட்டலானது சுமார் 1.8 பில்லியன் (UAE) திரஹம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/image_article/article-2284971-184F0F13000005DC-324_634x423.jpg

இவ் ஹோட்டலானது இரண்டு கோபுரங்களைக் (டவர்) கொண்டது. தற்போது திறக்கப்பட்டுள்ள டவரானது 684 அறைகளையும் 120 சுயுட்களையும் கொண்டுள்ளது.சுமார் 355 மீற்றர் பரப்பளவு கொண்ட டவரானது 72 மாடிகளைக் கொண்டுள்ளது.

http://www.virakesari.lk/image_article/article-2284971-184F0E1A000005DC-831_634x423.jpg

இதன் மற்றைய டவர் 2014 ஆம் ஆண்டு திறக்கப்படவுள்ளதுடன் அதுவும் 804 அறைகளைக் கொண்டுள்ளது.
9 உணவகங்கள், 5 பார்கள், 2 போல் ரூம்கள் மற்றும் ஸ்பாவையும் இவ் ஹோட்டல் கொண்டுள்ளது.

http://www.virakesari.lk/image_article/article-2284971-184F0EFE000005DC-519_634x423.jpg

நபரொருவருக்கான அறையொன்றின் ஆகக் குறைந்த கட்டணம் 326 அமெரிக்க டொலர்களாகும்.

http://www.virakesari.lk/image_article/article-2284971-184F0D33000005DC-225_634x424.jpg
ஹோட்டலின் 7 ஆவது மாடியில் 30 மீற்றர் நீச்சல் தடாகம் அமைக்கப்பட்டுள்ளது.  இதன் கட்டுமாணப் பணிகள் 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பமாகியது.

எமிரேட்ஸ் குழுமத்திற்குச் சொந்தமான இவ் ஹோட்டல் மெரிஹொட் இண்டர்நேஷல் நிறுவனத்தின்  முகாமைத்துவத்தின் கீழ் செயற்படுகின்றது.

http://www.virakesari.lk/image_article/article-2284971-184F0B81000005DC-144_634x424.jpg

டுபாய் நாட்டிலேயே அமைந்துள்ள ‘ரோஸ் டவர்’ ( Rose Rayhaan by Rotana) ஹோட்டலே இதுவரை உலகின் மிக உயரமான ஹோட்டல் என்ற பெருமையைப் பெற்றிருந்தது. இதன் உயரம் 1,093 அடிகளாகும்.

தற்போது ஜே.டபிள்யூ மெரிஹொட் மார்குயிஸ் டுபாய் உலகின் மிக உயரமான ஹோட்டலாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் கின்னஸ் புத்தக்கத்திலும் பதிவாகியுள்ளது.

Comments