18 வயது பாடசாலை மாணவியொருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார். விளையாட்டுப் போட்டியொன்றில் கலந்து கொண்ட போது குறித்த மாணவி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாவனல்ல ரிவிசந்த கல்லூரியின் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

18 வயதான ஹசனி அனுஸா என்ற மாணவி மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட போது இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மூன்று மாணவ மாணவியர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments