யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் 28ஆவது பட்டமளிப்பு விழாவில் வேந்தர், உபவேந்தர் ஆகியோருக்கு வழங்கப்படுகின்ற கொடி, குடை, ஆலவட்டம் முதலான ஆலாபரணங்கள் போன்றன வழமைக்கு மாறாக இம்முறை நீக்கப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

முன்னைய ஆண்டுகளில் நடைபெற்ற பட்டமளிப்பு வைபவங்களில் வேந்தர், உபவேந்தர் ஆகியோருக்கு வழங்கப்படுகின்ற கொடி, குடை, ஆலவட்டம் முதலான ஆலாபரணங்கள் பிடிக்கப்படுவது வழக்கம் எனினும் யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இந்த நடைமுறையினை நிறுத்திக் கொள்ளுமாறு பல்கலை நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்ததையடுத்து இம்முறை குறித்த நடைமுறை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரிடம் கேட்டபோது,

ஆண்டான்- அடிமை முறையில் இருக்கக் கூடிய அடையாள சின்னமாக இருக்கும் இத்தகைய ஆலாபரணங்களை இம்முறையும் எதிர்வரும் காலங்களிலும் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாக்களில் விலக்கிக் கொள்ளுமாறு பல்கலை நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன் நிகழ்வினைச் சிறப்பிக்கும் முகமான வரவேற்பு முறைகளை பின்பற்றுமாறும் நிர்வாகத்தினரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம் அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றனர்.

Comments