அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர்  கிளைவ் பால்மர்  1912ஆம் ஆண்டு கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைப் போன்ற புதிய கப்பலை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

நேற்று நிவ்யோர்க் நகரத்திலுள்ள இன்டர்பிட் சீ அருங்காட்சியகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இதனைத் தெரிவித்தார்.

இந்த கப்பல் கட்டும் பணி சீனாவில் விரைவில் தொடங்க இருப்பதாகவும், இது 2016-ம் ஆண்டு இது முடிவடைந்து பயணிகள் இதில் பயணத்தை மேற்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கப்பலின் முதல் பயணத்தின் டிக்கெட்டுகளை வாங்க 40 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். டைட்டானிக் கப்பலைப் போலவே இந்த புதிய கப்பலும் இங்கிலாத்தில் உள்ள சவுத்ஹெம்டன்   பகுதியிலிருந்து அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரம் வரை முதல் பயணத்தை மேற்கொள்ளும்.

இந்த கப்பலில் பயணிப்பவர்கள் அனைவரும் 1912 ஆம் ஆண்டில் இருந்த   பழைய பாணி உடைகளை அணிவார்கள். அவர்களுக்கு டைட்டானிக் கப்பலில் வழங்கப்பட்ட அதேவிதமான உணவுகளே பரிமாறப்படும்.

http://www.virakesari.lk/image_article/ge-small2.jpg

‘டைட்டானிக்-2′ கப்பலை உருவாக்கும் பின்லாந்தை சேர்ந்த வடிவமைப்பாளர் கூறுகையில், இதுவே உலகின் மிகப் பாதுகாப்பான கப்பலாக இருக்கும்.’ என்றார்.

கடந்த 1912-ம் வருடம் ஏப்ரல் 15-ம் தேதி டைடானிக் கப்பல் 2200 பயணிகளுடன் சென்று பயணித்துக் கொண்டிருந்த போது வடக்கு அட்லாண்டிக் பகுதியிலிருந்த பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இதில் 700 பேர் மட்டுமே உயிர் தப்பித்தனர்.

Comments