மாதகல் கடற்பரப்பில் சிறிய படகுகளில் இந்திய மீனவர்கள் வந்து தொழில் செய்வதால் மாதகல் கடற்றொழிலாளர்கள் பாதிப்படைகின்றனர் என்று மாதகல் கடற்றொழிலாளர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இது வரைகாலமும் றோலர்களில் வந்து மாதகல் கரையில் இருந்து சுமார் இரண்டு மூன்று கிலோ மீற்றர் தூரத்தில் மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் தற்போது  வத்தைகள் மற்றும் சிறிய படகுகளில் மாலை வேளைகளில் வந்து தொழில் செய்கின்றனர்.

அத்துடன் தமது வலைகளையும் சேதப்படுத்திச் செல்வதாகவும் கவலை தெரிவித்துள்ளனர். இவர்கள் இலங்கை கடற்றொழில் திணைக்களத்தால் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை பயன்படுத்துவதுடன் தொழிலுக்கு இடையூறாகவும் நடந்து கொள்கின்றனர் என்றும் கூறுகின்றனர்.

மாதகல் கடற் பிராந்தியத்துக்கு பொறுப்பாக இருக்கும் கடற்படைத் தளபதியிடம் இந்த விடயம் குறித்து முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Comments