இந்த வைரஸ் ஸ்கைப் பயன்படுத்துவோரின் காண்டாக்ட் முகவரி எளிதாக அவர்களைச் சென்றடையும். இதில் ஏதேனும் ஒரு லிங்க் தரப்பட்டிருக்கும். இதில் கிளிக் செய்தால், கெடுதல் விளைவிக்கும் வைரஸ் புரோகிராம், கணனியில் வந்து விடும். இவ்வாறு வந்துவிட்டால் இந்த புரோகிராம், கணனியில் சேமித்து வைத்த பெர்சனல் தகவல்களை, இணையம் மற்றும் வங்கி கணக்குகளுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை, தொலைவில் உள்ள இன்னொரு சர்வருக்கு அனுப்பிக்கொண்டே இருக்கிறது.

இந்த வைரஸ்சை இயக்குபவர், தொலைவில் இருந்தே உங்கள் கணனியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் இந்த வைரஸ் புரோகிராம் செயல்படுகிறது எனவே இதனைத் தவிர்க்க, ஸ்கைப் காண்டாக்ட் முகவரியில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து வரும் இன்ஸ்டண்ட் மெசேஜில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்துவிடக்கூடாது

Comments