பள்ளியின் கழிப்பறையில் நேற்று காலை கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் புர்னியா மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியின் கழிவறையிலிருந்து புகை வந்துள்ளது.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், ஓடி வந்து பார்த்த போது கருகிய நிலையில் சடலம் கிடந்துள்ளது.

இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியில், அவர் இறந்து விட்டார்.

இதன் பின் பொலிசார் விசாரணை நடத்தியதில், இறந்தவர் ரஞ்சித் குமார்(வயது 40) என்ற ஆசிரியர் என்பதும், அவரது கை, கால்களைக் கட்டி அவருடன் வேலை பார்த்த ஆசிரியர்களே, மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்ததும் தெரியவந்தது.

இருப்பினும் ஏன் இப்படி செய்தார்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை, தப்பியோடிய சக ஆசிரியர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

Comments