யாழ் பல்கலைக்கழக மாணவிகளுடன் பாலியல் சேட்டையில் ஈடுபட முயலும் பொருளியல் துறை விரிவுரையாளர் செ. இளங்குமரனை உடனடியாக பதவி நீக்கம் செய்ய கோரி ஆர்பாட்டமொன்றினை மாணவர்கள் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பித்தனர். இவ்வார்ப்பாட்டத்தில் குறித்த விரிவுரையாளருக்கெதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியதுடன் விரிவுரையாளரின் கொடும்பாவி மாணவர்களினால் எரியூட்டப்பட்டது.

மேலும் இவரின் பல்கலைக்கழக தனியறை மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெருமளவான மாணவ இமாணவிகள் பங்குகொண்ட இவ்வார்ப்பாட்டம் ஒரு மணித்தியாலம் நீடித்ததுடன் இறுதியாக துணைவேந்தருக்கு கலைப்பீட மாணவ ஒன்றியத்தினால் மகஜர் அனுப்பப்பட்டது.

குறித்த பேராசிரியர் மாணவிகளை அச்சுறுத்தி பல வருடங்களாக பாலியல் ரீதியான தொல்லைகள் மேற்கொண்டு வருவதாகவும் இதனை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதாரங்களுடன் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்பவில்லை எனவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த பேராசிரியர் மீது மாணவர்களால் முன்வைக்கப்பட்ட 25 குற்றசாட்டுக்களில் முக்கியமானவை,

01) மாணவிகளிடம் தொலைபேசி எண் தருமாறு வற்புறுத்தல், பெண்களை தனியாக அறைக்கு வருமாறு கூப்பிடுதல், பரீட்சை வினாத்தாள்கள் எடுப்பதற்கு ஒவ்வொரு மாணவியையும் தனித்தனியாக வரவேண்டும் என வற்புறுத்துகின்றமை.

02) தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டு குறுந்தகவல் அனுப்பியமை, தனக்கு எதிராக செயற்படுபவர்களை காட்டித்தருமாறு வற்புறுத்தியமை, தன்னுடைய பாடத்தை எடுக்குமாறு கட்டாயப்படுத்தியமை, இதனோடு பரீட்சை வினாத்தாளில் பெயர் எழுதும்படி வற்புறுத்தியமை.

03) குறைந்த புள்ளி எடுப்பவர்களைத் தனது பிரத்தியேக அறையில் வந்து சந்திக்கும்படியும் சந்தித்தால் மட்டுமே புள்ளி வழங்குவேன் என்றும் கூறியமை, தனது பிரத்தியேக அறைக்கு 2 மணிக்குப் பின்னர் தனியாக வந்து சந்திக்க கூறுகின்றமை.

04) தன் செயற்பாடுகளுக்கு உடன்பட்டால்தான் நல்ல புள்ளிகளை வழங்குவேன் என அச்சுறுத்துகின்றமை, தனது பாடத்தை எடுக்காத மாணவர்களுக்கு இறுதியாக புள்ளிச் சான்றிதழ் வழங்கும் போது இது முழுமையான பட்டம் அல்ல என எழுதி விடுவேன் எனப் பயமுறுத்தியமை.

Comments