கடந்த டிசம்பரில் நடைபெற்ற க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் தமிழ்மொழி மூலம் 14 மாணவர்களும் ஆங்கில மொழி மூலம் 4 மாணவர்களும், யாழ். இந்துக் கல்லூரியில் தமிழ்மொழி மூலம் 11 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 4 மாணவர்களும் ஒன்பது பாடங்களிலும் அதிவிசேட (A தர) சித்தி பெற்றுள்ளனர்.
மேலும் யாழ். இந்து மகளிர் கல்லூரியில் தமிழ்மொழி மூலம் ஒருவரும், ஆங்கில மொழி மூலம் ஒருவரும், கொக்குவில் இந்துக் கல்லூரியில் தமிழ்மொழி மூலம் மூவரும், சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் தமிழ்மொழி மூலம் மூவரும் ஒன்பது பாடங்களிலும் அதிவிசேட (A தர) சித்தி பெற்றுள்ளனர்.
இதேவேளை வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியில் ஒருவருக்கு 8 Aயும், 1B யும், ஒருவருக்கு 4A யும், 3B யும், 1C யும், 3 பேருக்கு 3 Aயும், 3B யும், 3 Cயும் கிடைத்துள்ளன
பம்பலப்பிட்டி இந்துவில் 13 பேர், இராமநாதனில் 7 பேர் 9 பாடங்களில் A சித்தி
2011 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற க.பொ.த(சா/த) பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் 13 பேரும், இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் ஏழு பேரும், றோயல் கல்லூரியில் தமிழ்ப் பிரிவில் 5 பேரும் ஒன்பது பாடங்களிலும் அதிவிசேடதரத்தில் (A) சித்தியடைந்துள்ளனர்.
பரீட்சைகள் திணைக்களம் கடந்த திங்கள் அதிகாலையிலேயே இணையத்தளத்தின் மூலமாக பெறுபேறுகளை வெளியிட்டது,

 

Comments