சென்னை: தமிழக முதல்வர் ஜெ.,யின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலாவுடனான மனக்கசப்பு முடிந்து மீண்டும் சேர்ந்தனர். கடந்த டிசம்பர் மாதம் சசி மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும் இன்று ஜெ.,அறிவித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், முதல்வர் பதவியை பிடிக்க சசி மற்றும் அவரது உறவினர்களுடன் சேர்ந்து சதி திட்டம் போட்டதாகவும், இது தொடர்பாக பெங்களூரூவில் ஒரு நட்சத்திர ஓட்டலில் ரகசிய கூட்டம் நடந்ததாகவும் ஜெ., வுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து டிசம்பர் மாதம் கட்சியில் இருந்து சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன், மற்றும் மன்னார் குடியை சேர்ந்த சசியின் நெருங்கிய உறவினர்களான ராவணன், தினகரன், திவாகரன், சுதாகரன், உள்ளிட்ட 13 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிரடியாக அறிவித்தார். தொடர்ந்து அவர்கள் மீது நில அபகரிப்பு மற்றும் மோசடி வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசி கோர்ட்டில் என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதில் ஜெ.,வுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. எல்லா முடிவுகளும் நானே எடுத்தது என்றார். இதுவும் ஜெவுக்கு சற்று திருப்தியை தந்தது.

இதனையடுத்து கடந்த வாரம் சசி , ஜெ.,வுக்கு ஒரு கடிதம் எழுதினார். தொடர்ந்து அவருக்கு துணையாக பணியாற்ற விரும்புவதாகவும், கனவில் கூட அக்காவுக்கு துரோகம் நினைத்தது இல்லை என்றும் உருக்கமாக ஒரு கடிதம் எழுதியிருந்தார். கடிதம் எழுதப்பட்ட உடனே சசி மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்க்கப்டுவார் என்று பேசப்பட்டது

Comments