தூத்துக்குடி: கோவில்பட்டியில், கல்லூரி மாணவியை மயக்கி ஆபாச படமெடுத்து, அவரை மிரட்டிய பேராசிரியர், மாணவியின் உறவினரிடம் சிக்கினார். கோவில்பட்டியைச் சேர்ந்தவர் பாபு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனியார் கல்லூரி பேராசிரியர். இதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண், சாத்தூரிலுள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். பாபுவிடம் அவர் டியூசனுக்கு சென்றார். இருவரும் நெருங்கிப் பழகினர். அதை வீடியோ கேமராவில் பாபு பதிவு செய்தார்.அதுகுறித்து மாணவி கேட்டபோது, “”ஆபாச படகாட்சிகளை வெளியிடுவேன்” என பாபு மிரட்டியுள்ளார். பாபுவின் நிர்பந்தத்தால் அவரது நண்பர்கள் சிலருக்கும், மாணவி விருந்தாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, மாணவியின் உறவினருக்கு தெரியவரவே, பேராசிரியர் பாபுவை அடித்து உதைத்து, அவரிடமிருந்து மாணவியின் ஆபாச படகாட்சிகள் அடங்கிய லேப்-டாப்பை பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தார். விசாரணை நடந்து வருகிறது.

Comments